Nagaratharonline.com
 
கோவை, பொதிகை ரயில் நேரம் மாற்றம்  Aug 28, 14
 
ரயில் எண் 12676: கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இனி பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12661: எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை விரைவு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. இரவு 8.50க்கு புறப்படுவதற்கு பதிலாக 8.55க்கு புறப்படும்.

ரயில் எண் 12601: சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.25க்கு புறப்பட்ட மங்களூர் விரைவு ரயில் இனி இரவு 8.15 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 16021: சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட விரைவு ரயில் இனி இரவு 9 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 22651: சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயில் இனி இரவு 9.30 மணிக்கு புறப்படும்.