Nagaratharonline.com
 
வேளாங்கண்ணி திருவிழா:காரைக்குடியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்  Aug 27, 14
 
வேளாங்கண்ணியில்ஆ க. 29 முதல் திருவிழா துவங்குவதால் பக்தர்கள் வசதியை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் காரைக்குடி மண்டலத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் செப். 9-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

இப்பேருந்துகள் ஓரியூரிலிருந்து, மீமிசல், கோட்டைப்பட்டிணம், அதிராமப்பட்டிணம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்படவுள்ளதாக காரைக்குடி மண்டலப் பொது மேலாளர் எம்.பாலகிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.