Nagaratharonline.com
 
காரைக்குடியில் கண்ணதாசன் விழா போட்டி  Aug 13, 14
 
கவியரசர் கண்ணதாசன் அறக்கட்டளை சார்பில், காரைக்குடியில் கண்ணதாசன் விழா போட்டிகள், வரும் 17ம் ÷தி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடக்கிறது. பாட்டு ஒப்புவித்தல் போட்டியில், மழலையர் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், கண்ணதாசன் பாடல்களில் ஏதேனும் ஒன்றை பாட வேண்டும், ஒன்பது முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டிகள், நடக்கிறது.
பொதுமக்களுக்கான இசை போட்டியும் நடக்கிறது. போட்டியின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு கல்வி நிலையத்திலிருந்து இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதில் பங்கேற்க விரும்புவோர், வருகிற 16-ம் தேதிக்குள், அரு.நாகப்பன், 16, தேசிய விநாயகர் தெரு, சுப்பிரமணியபுரம் முதல் வீதி வடக்கு, காரைக்குடி 630 002 என்ற முகவரிக்கு தங்கள் விபரங்களை அனுப்பி, பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 94431 42113 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை பொது செயலாளர் அரு.நாகப்பன் தெரிவித்துள்ளார்.