Nagaratharonline.com
 
தொடர் கலசத் திருட்டால் பக்தர்கள் கவலை!  Jul 14, 14
 
திருப்புத்தூர் பகுதியில் அவ்வப்போது, கோயில் விமான,கோபுர கலசங்கள் திருடு போவது தொடர்கதையாகி விட்டது.இதுவரை கலசத்திருடர்கள் யாரும் போலீசாரிடம் சிக்கவில்லை.

அண்மை காலமாக, திருக்கோளக்குடி,தெக்கூர்,திருக்கோஷ்டியூர் பகுதி கோயில்களில் கலசங்கள் திருடு போயின. தாமிரத்தாலான இக்கலசங்கள்,சில ஆயிரங்கள் என்று மதிப்பிடப்பட்டு, வழக்குப்பபதிவு செய்து விட்டு, விசாரணை துவக்க நிலையிலேயே இருக்க, அனைவருமே மறந்து விடுகின்றனர். இதனால், மேலும் பல கோயில் கலசங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து குறித்து பக்தர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

இக்கலசங்கள், ஐம்பொன், தங்கம்,வெள்ளி அல்லது செப்பு உலோகத்தால் செய்யப்படுவதால், மின்காந்த அலைகளை ஈர்க்கும் தன்மையுடையது. இக்கலசத்தில், நெல்,கம்பு,கேழ்வரகு,திணை, வரகு,சோளம், மக்காச்சோளம்,சாமை,எள் ஆகியவற்றைக் கொட்டினர். வெள்ளம்,வறட்சி வந்து,விதைகள் அழிந்தாலும், பாதுகாப்பாக, கலசத்திலுள்ள விதைகளை எடுத்து விவசாயம் செய்தனர். இதனால், பாரம்பரிய விதைகள் பாதுகாப்பாக தொடர்ந்தன.மேலும், வரகு தானியம் அதிகமாக கொட்டப்பட்டிருக்கும். காரணம், வரகு தானியம் தான் "மின்னலை'த் தாங்கும் அதீத ஆற்றலைப் பெற்றுள்ளது. எனவே, இக்கலசங்கள்,"எர்த்' ஆக அதாவது, இடிதாங்கியாக இருந்தும் மக்களைக் காப்பாற்றியுள்ளது.

மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கும் நடத்தி, தானியங்களை மாற்றி வந்தனர். எதற்கு தெரியுமா? 12 ஆண்டுகளுக்கு மட்டுமே,இந்த தானியங்கள் முளைக்கும் திறன் பெற்றவை என்பதால் தான். கலசம் திருடு போவதையும், பல திருட்டுகளுடன் ஒன்றாக, வெறும் சம்பிரதாயமாக வழக்குப் பதிவுடன் நின்று விட்டது.நமது முன்னோர்களின் ஆன்மிகம், அறிவியல் அறிவின்"அடையாளம்' பறிக்கப்படாமல் பாதூக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.

source : Dinamalar