Nagaratharonline.com
 
கானாடுகாத்தான் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம்  Jul 10, 14
 
கானாடுகாத்தானில் பெரியகோயில் என்ற ழைக்கப்படும் அருள்மிகு கைலாசநாதர் - சௌந்தரநாயகி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் இரவு சுவாமி திருவீதி யுலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை தவசு மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது.

திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தை யொட்டி தேரில் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். விழாவில் கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி, கொ.லெட்சுமிபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ஏ.எல். வெங்கடாசலம் செட்டியார், கட்டளை அறங்காவலர் எம்.சண்முகம் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.