Nagaratharonline.com
 
வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்  Apr 20, 14
 
பொன்னமராவதி, :பொன்னமராவதி அருகே மூன்று கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 14ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை 10.20 மணியளவில் ஸ்ரீரங்கம் பிரான அர்ச்சகர் ரங்கராஜ் பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். வேகுப்பட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முத்துப்பழனியப்பன் மீனாட்சி ஆகியோரால் 24 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் பிரஷ்ட்டை செய்யப்பட்டு பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் குப்பாபிஷேகத்தில் சுற்றுப் பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல அங்குள்ள சுப்பையா கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றன. அம்மாபட்டியில் உள்ள திருமலை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 14ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 8.45 மணியளவில் சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

Source:Dinakaran