Nagaratharonline.com
 
Sani Peyarchi
Start Date:   Dec 19, 17
End Date:   Dec 19, 17
Venue:  
Viewed:   164   times
 
 
நவகிரகங்களில் முதன்மை ஆனவர் சனி பகவான். இவர் சூரியனின் புத்திரன். சிவபெருமானுக்கு இணையாக ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே ஆவார். ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் “மந்தன்” எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானது எப்படி ?

இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன.

இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான்.

கிரகங்களில் மிகவும் மந்த தன்மை உடையவர்..சனிபகவான் தரும் நன்மைகளும் தீமைகளும் அதிகம் ,இதனால்தான் இவரைப் பற்றி இப்படி சொல்வர்
சனியைப்போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் 'இல்லை'

சனிபகவான் ஒரு ராசியை கடக்க 2 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார்.
சனிபகவான் 19/12/2017அன்று காலையில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.

Saturn is called Pongu Sani as well as Mangala Sani in Thirukollikadu as he blesses the devotees abundantly.