Nagaratharonline.com
 
Soorasamharam @ Thiruchendur
Start Date:   Oct 25, 17
End Date:   Oct 25, 17
Venue:   திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. 25-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.
Viewed:   37   times
 
20/10/2017 - காலை 6 மணிக்கு யாகசாலைக்கு அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை தொடங்குகிறது. 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

அக்.25-ம் தேதி மாலை 4.30 மணிக்குமேல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

அக்டோபர் 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.