Nagaratharonline.com
 
Cauvery Maha Pushharam at Mayiladuthurai
Start Date:   Sep 12, 17
End Date:   Sep 24, 17
Venue:  
Viewed:   881   times
 
 
காவிரி புஷ்கரம் தமிழ்நாட்டின் மேட்டூர் தொடங்கி, பூம்புகார் வரை, காவிரி ஆற்றின் கரையில் நடைபெறுகின்ற விழாவாகும்.

புஷ்கரம் என்பதற்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அந்தந்த ராசிகளுக்கு உரித்தான புண்ணிய ஆறுகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பயப்பதாகும். துலாம் ராசி காவிரி நதிக்குரியதாகும். ராசிக்குப் பொருத்தமான புண்ணிய நதி என்ற நிலையில் 12 செப்டம்பர் 2017இல் குரு பகவான், துலாம் ராசியில் பிரவேசிப்பதால், காவிரி ஆற்றில், புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. தற்பொழுது நடைபெறும் குருப் பெயர்ச்சியானது 144 ஆண்டுக்கொரு முறை வருகின்ற மகா குருப் பெயர்ச்சியாகும். குரு பகவான் மேஷம் முதல் மீனம் முதல் ராசிகளைக் கடக்கின்ற சமயத்தில் கங்கா, நர்மதா, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, ப்ராணஹிதா எனப்படுகின்ற 12 ஆறுகளிலும் அநதந்த ராசிகளில் இவ்விழா நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் 144 ஆண்டுகளுக்குப் பின் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 12 செப்டம்பர் 2017இல் தொடங்கும் காவிரி மகா புஷ்கரம் என்னும் புனித நீராடல் 23 செப்டம்பர் 2017 வரை நடைபெறுகிறது,


இவ்விழா நாள்களில் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆகையால் இக்காலகட்டத்தில் சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், துறவியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் மயிலாடுதுறையில் துலாக்கட்டத்தில் நீராடுவர். விழா நாள்களில் பக்தர்கள் நீராடுவதற்காக குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புஷ்கரத்திற்காக நிரந்தரத் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வரும்போது காவிரி ஆற்றின் நடுவில் நந்திக்கோயிலைச் சுற்றி மூன்றடி ஆழத்தில் ஒன்பது பழங்காலக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.