Nagaratharonline.com
 
கருத்தரங்கம்
Start Date:   Apr 9, 17
End Date:   Apr 9, 17
Venue:  
Viewed:   70   times
 
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் காரைக்குடி அருகே கோட்டையூர் வள்ளல் அழகப்பர் இல்லத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி கம்பன் கழகச் செயலர் பழ.பழனியப்பன் புதன்கிழமை கூறியதாவது: காரைக்குடி கம்பன் கழகம், கம்பன் திருவிழா பவள விழாவையொட்டி கடந்த 2013, 2014 ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுக் கருத்தரங்குகளை காரைக்குடியில் நடத்தியது. 2016-ல் அந்தமான் தீவில் 3-வது கருத்தரங்கத்தை நடத்தியது.
இந்த ஆண்டு 79-ஆம் ஆண்டுக் கம்பன் திருவிழாவையொட்டி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்துகிறது. இது நான்காவது பன்னாட்டுக் கருத்தரங்கு ஆகும்.

இக்கருத்தரங்கம் வள்ளல் அழகப்பர் இல்லத்தில் நடக்கிறது. இதில் சிங்கப்பூர் கவிஞர் அ.கி.வரதராசன் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பித்துள்ள அரிய மாமனிதர் அழகப்பர் என்ற கவிதை நூலை அழகப்பரின் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா வெளியிடுகிறார்.
இக்கருத்தரங்கை செட்டிநாடு குழுமங்களின் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா தொடக்கி வைக்கிறார். திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் மையக் கருத்துரை வழங்குகிறார் .நமது செட்டிநாடு இதழ் புரவலரும் செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநருமான ராஜாமணி முத்துகணேசன் வாழ்த்திப் பேசுகிறார்.
நிறைவுவிழாவுக்கு தஞ்சாவூர் மூத்த இளவரசர் ராஜா சாகெப்போன்ஸ்லே சத்ரபதி தலைமை வகிக்கிறார். கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் நிறைவுரையாற்றுகிறார். ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு அன்றே வெளியிடப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு முனைவர் மு.பழனியப்பன் செல்லிடப்பேசி 9442913985 என்ற எண்ணிலோ, முனைவர் மா.சிதம்பரம் செல்லிடப்பேசி 9486326526 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.