Nagaratharonline.com
 
Sani Peyarchi
Start Date:   Dec 20, 23
End Date:   Dec 20, 23
Venue:  
Viewed:   905   times
 
 
நவக்கிரககளில் முதன்மையான கிரகம் சூரியன். சூரியனின் மகன்தான் சனி பகவான். ஈஸ்வரன் என்ற பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி தான். "சனியைப் போல் கொடுப்பவருமில்லை கெடுப்பவரும் இல்லை" என்பது பழமொழி .

2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 20/12/23 தேதி
5.22 pm மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

தீய பலங்களை தருகின்ற குளிகன், மாந்தி ஆகியோருக்கு சனி தந்தையாகிறார். சனி, நீல நிறமாக இருப்பதால் நீலன் என்றும் மெதுவாக செல்வதால் மந்தன் என்றும் முடவன் என்றும் அழைக்கப்படுகிறார். சனியின் ஆதிக்கம் மிக்கவர்கள் மந்தமாக செயல்படுவார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

நம் பூமிக்கு ஒரு சந்திரன் இருப்பது போல சனியை ஒன்பது சந்திரன்கள் சுற்றி வருகின்றன. சனி ஒரு முறை சூரியனை சுற்றி வர ஏறத்தாழ இருபத்து ஒன்பதரை வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே சனி ஒவ்வொரு ராசியையும் கடந்து செல்ல இரண்டரை வருடங்களை எடுத்துக் கொள்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு ஆலயத்தில் வீற்றிருக்கும் பொங்கு சனி பகவானை வழிபட்டு வரலாம்