Nagaratharonline.com
 
Nerkuppai Sonaiyaa Kovil Kumbabishegam
Start Date:   Apr 21, 16
End Date:   Apr 21, 16
Venue:   நெற்குப்பை - பரியாமருதுபட்டி சாலையில் உள்ளது
Viewed:   896   times
 
 
ஸ்ரீ பரிபூரண புஷ்கலா தேவியர் சமேத ஒமக்காட்டு ஐயனார் ஆலயத்தில், ஐயனாருக்கும் மாயாண்டி சுவாமி, ஓமக்கருப்பர், செங்கிடாய்கருப்பர், முத்துக்கருப்பர், வீரபத்திரர், ஆச்சி அம்மன், தொட்டிச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சோணையா சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. Time : 8.05 am to 9.05 am

19/04/2016 மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது.

நெற்குப்பை - பரியாமருதுபட்டி சாலையில் உள்ள வைகாசி விசாகத் தோப்பு அருகில், சோணையா சுவாமி கோவில் அமைந்துள்ளது . முன்னர், இப்பகுதி காடுகள் சூழ இருந்ததால், ஓமக்காடு என்றும், கண்மாயை ஓமக்கண்மாய் என்றும், இப்பகுதி வயல்களை ஓமவயல் என்றும் அழைத்தனர் . ஓமக்காட்டுப் பகுதியில் ஐயனார் குடிகொண்டு இருந்ததால் ஓமக்காட்டு ஐயனார் என பெயர் ஆயிற்று .இக்கோவில் ஐயனார் கோவிலாக இருந்தாலும் சோணையன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருவதால் 'சோணையன் கோவில்' என்று அனைவரும் அழைத்து வருகிறார்கள்.

சூரக்குடி கோவிலை சேர்ந்த சோணையனை குலதெய்வமாக கும்பிடும் செவ்வூர், பூலாங்குறிச்சி, நெற்குப்பை,வேகுப்பட்டி, மிதிலைப்பட்டி, பனையப்பட்டி வாழ் நகரத்தார்கள், பல நூற்றாண்டுகளாக சோணையன் கோவில் படைப்பை சிறப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .