Nagaratharonline.com
» All
» Interview
» Article
Article
     

சுந்தர காண்டம்  -  சிறப்பும் பெருமையும்

 

இராமாயணம், மனித குலத்தின் வாழ்க்கை நெறிக்குத்  தேவையானவற்றை சொல்கிறது. வேடனாகத் திரிந்து,

திருடும் தொழில் புரிந்த வால்மீகி, முனிபுங்கவரின் உபதேசத்தின்படி, ராமநாம ஜெபம் செய்து, முனிவரான  நிலைக்கு உயர்ந்து, பின்பு சம்ஸ்கிருத மொழியில் இராமயணத்தை இயற்றினார்.

 

இராமாயணம் 7 காண்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

 

பால காண்டம்                     : ஸ்ரீ ராமனின் இள வயது பருவம் 

அயோத்தியா  காண்டம்    : ஸ்ரீ இராமனின் வீர தீர செயல்கள்

ஆரண்ய காண்டம்              : காட்டில் சீதையை பிரியும் வரை

கிஷ்கிந்தா காண்டம்          : அனுமான் சந்திப்பு, வாலி வதம்

சுந்தர காண்டம்                    இலங்கையில் அனுமான் சீதை சந்திப்பு

யுத்த காண்டம்                    : இராம இராவண யுத்தம்

உத்திர காண்டம்                  : இராமன் அயோத்தி திரும்புதல்

 

இவற்றுள் மிக சிறந்தது சுந்தர காண்டம். வால்மீகி ஏன் சுந்தர காண்டம் என பெயரிட்டார்? சுந்தரம் என்றால் அழகு. இராமாயணத்தின் நாயகன் ஸ்ரீ ராமன். நாயகி சீதை என அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயர்.

வால்மீகி முதலில்ஆஞ்சநேய காண்டம்என்று தலைப்பு கொடுத்தார். உடனே, ஆஞ்சநேயர் வால்மீகியிடம் வந்து ,"நான் ராம தாசன். என் பெயர் வைக்க வேண்டாம் " என்று மன்றாடி கேட்டுகொள்கிறார். பொருள் புதிந்த  புன்னகையுடன் சம்மதித்து ஆஞ்சநேயர் விருப்பப்படி மாற்றிசுந்தர காண்டம் என பெயரிட்டார்ஆஞ்சநேயர் மகிழ்ச்சியடைந்தார்.

 

பின்பு, ஒருநாள் ஆஞ்சநேயர் , தன் அன்னை அஞ்சனையை, காண செல்லும்போது, அஞ்சனை "சுந்தரா வா" என்று வரவேற்கிறாள். ஆஞ்சநேயர் வியப்புடன் அன்னையை நோக்கி, "ஏன் அம்மா, என்னை சுந்தரா என அழைத்தீர்கள்" என்று கேட்க, அஞ்சனையோ ," நாங்கள் உனக்கு இட்ட பெயர் சுந்தரம், அதனால் அவ்வாறு அழைத்தேன் என்று சொன்னாள். அப்போது வால்மீகியின் தீர்க்க தரிசனத்தை, ஆஞ்சநேயர் உணர்ந்து கொண்டு ஓடோடி வந்து வால்மீகியை  சந்தித்து மறுபடியும் பெயர் மாற்றும்படி கேட்டார். வால்மீகியோ, சுந்தர காண்டத்தை நிறைவு செய்துவிட்டேன். இனி, மாற்றுவதற்கு இடமில்லை என முடிவாக சொல்லிவிட்டார்.ஆஞ்சநேயர் பெருமையை அனைவரும் அறியும் பொருட்டு ,வால்மீகி இவ்வாறு செய்தார்.

 

 ஆஞ்சநேயரின் வீரத்தையும்,  ஸ்ரீ ராமன் - சீதை இணைய தூதுவன் போல் இலங்கை சென்றதையும் சொல்வது சுந்தர காண்டம். சொல்லின் செல்வன் அனுமனை,  கம்பர், பஞ்ச பூதங்களான நீர், நிலம். நெருப்பு காற்று, ஆகாயம்  ஆகிய ஐந்தையும்  தன், கவியாற்றலால் வெளிப்படுத்துகிறார்.

 

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்  தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றுவைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்

 

காற்றுக்குப் பிறந்தவன் ( வாயு புத்திரன்) , கடலைத் தாவியவன், வானத்தில் பறந்தவன், நிலத்தில் பிறந்த சீதையைக் கண்டவன் , அயலார் ஊரான இலங்கையில்  நெருப்பு வைத்தவன் .

 

இராமயணத்தை பாராயணம் செய்தால் நாராயணன் நன்மை எல்லாம் தருவான். நாராயணனுக்கே உதவிய ஆஞ்சநேயரின் வீரத்தையும் தீரத்தையும் சொல்லும் சுந்தர காண்டத்தை வாசித்தால் வாழ்வு வளம் பெரும். துயரங்கள்  தொலைந்து போகும்,வாசிக்க வாசிக்க நமக்கு வலிமை உருவாகும் ,கால தாமதமான திருமணங்கள் விரைவில் கை கூடும். கவலைகள் பறந்து போய் விடும்.

 

சுந்தர காண்டத்தை வாசியுங்கள், வாழ்க்கையில் மாற்றங்கள் வர வர அனுமனை யோசியுங்கள்.

மாற்றத்தை, “ நகரத்தார் கேட்வே வெப்சைட்டுக்கு எழுதுங்கள் , மற்றவர்களும் உணரட்டும்

 

இராமநாமத்தை உச்சரித்த ஆஞ்சநேயர் கடலை அணை இல்லாமல் கடந்து விட்டார். ஆனால் ஸ்ரீ ராமனோ சேது அணை கட்டிய பிறகுதான் கடலைக்  கடந்தார். எனவே, ராமனை விட சக்தி வாய்ந்தது  இராமநாமம்.


 


- முரு. பெரியகருப்பன், நெற்குப்பை


எடிட்டர், Nagarathargateway.com

94440-49115

 


கருத்து / Article Feedback - email -periyakaruppans@yahoo.com

 

Misc Downloads Section-Right Click on the link and do Save Target As